கறுப்புப் பணத்தை பயன்படுத்தி ஆயுதம் கொள்வனவு : நிதி அமைச்சரின் கூற்று பாரிய சர்ச்சைக்குரியது - ஐ.தே.க.

03 Feb, 2022 | 01:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்தத்தின்போது ராஜபக்ஷ அரசாங்கம் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் தெரிவித்திருக்கும் கூற்று சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடியது. 

அதனால் இதுதொடர்பாக நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெளிவுடுத்தவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிலிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தக்காலத்தில் கறுப்பு பணக்தை பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுதம் கொள்வனவு செய்ததாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார். 

அவரின் இந்த கூற்று அவர் வெளிப்படுத்தும் வரை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் இதுதொடர்பாக நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தவேண்டும். 

இந்த கூற்று தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். 

சர்வதேச நாணய நிறுவனங்களினால் எமது பொருளாதாரம் பாரியதொரு நிலைக்கு தரப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இவ்வாறானதொரு கூற்று சர்வதேசத்துக்கு சென்றால் அது இலங்கையர்களுக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். 

நிதி அமைச்சரின் இந்த கூற்று காரணமாக  சர்வதேச அமைப்புகளின் உதவி அரசாங்கத்துக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுகின்றது. 

அத்துடன் யுத்தத்துக்கு ஆயுதம் கொள்வனவு செய்ய நிதி தேவைப்பட்டால் அதனை பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ள முடியும். 

சீனா, இந்தியா போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடியுமாகி இருந்தபோதும் அரசாங்கம் ஏன் வடகொரியாவில் இருந்து ஆயுதம் கொள்வனவு செய்ய தீர்மானித்தது? 

கொள்வனவு செய்த ஆயுதங்கள் எவை? 

அந்த ஆயுதங்கள் தொடர்பான விலை கணக்கிடப்பட்டிருக்கின்றதா போன்ற தெளிவான பதிலொன்றை நிதி அமைச்சர் பாாரளுமன்றத்துக்கு தெரிவிக்கவேண்டும். 

எனவே நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு இதுதொடர்பாக தெளிவுடுத்திய பின்னர் அதுதொடர்பான மேலதிக விடயங்களை எமக்கு தேடிக்கொள்ள முடியும். 

கறுப்பு பணத்தை பயன்படுத்தி வடகொரியாவில் இருந்து ஆயுத் கொள்வன செய்ததாக நிதி அமைச்சர்  தெரிவித்திருக்கும் கருத்து சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கின்றது என்றார்.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

பொரளையில் பாடசாலையொன்றில் மதில் சுவர் இடிந்து...

2026-02-12 14:48:32
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 14:37:56
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமைகள்...

2026-02-12 14:53:17
news-image

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலுக்கு எதிராக...

2026-02-12 13:42:36
news-image

மாத்தளையில் விரைவில் குரங்குகளுக்கான சரணாலயம்!

2026-02-12 13:18:11
news-image

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச...

2026-02-12 14:18:25