ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மற்றும் மற்றுமொரு நபருக்கெதிரான வழக்கு விசாரணை  எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவருக்கும் எதிராக 14 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவர்கள் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபாவினை கட்டாயப்படுத்தி பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.