(எம்.மனோசித்ரா)
தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் போது , எதிர்பாராத வகையில் , எதிர்பாராத வயது பிரிவினர் மரணிக்கக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. எனவே வைரஸ் பரவலுக்கு இடமளிக்காத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் நிறைவடைந்ததன் பின்னரும் ஒரு நபரால் தொற்று பரவக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகிறதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் போது , எதிர்பாராத வகையில் , எதிர்பாராத வயது பிரிவினர் மரணிக்கக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன.
அதற்காக மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாமலிருப்பது பொறுத்தமானதாக இருக்காது. இதற்கான ஒரே தீர்வு கொவிட் தொற்று பரவுவதைத் தவிர்ப்பது மாத்திரமேயாகும். தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பை சாதாரணமாகக் கருதக் கூடாது.
எதிர்;வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்கு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு , தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தொற்றாளர் எண்ணிக்கையில் ஏற்த்தாழ்வுகள் ஏற்படலாம்.
மக்கள் ஒன்று கூடல்களின் போது தொற்று விரைவாக பரவக் கூடிய வாய்ப்பும் அதிகமாகும். எனவே இதுபோன்ற விடயங்களை தவிர்த்து பாதுகாப்பாக செயற்பட வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM