மல்வானை பகுதியில் உள்ள காணி மற்றும் வீடு தன்னுடையது அல்ல என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பூகொடை நீதிமன்றத்தில் தெரிவித்ததுள்ளார்.

மல்வானை  பகுதியில் உள்ள 16 ஏக்கர்  காணி விவகாரம் தொடர்பிலான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.