நாட்டின் வளர்ச்சிக்கு நிபுணர்களின் ஆதரவு மிகவும் அவசியம் - பிரதமர்

Published By: Vishnu

02 Feb, 2022 | 05:51 PM
image

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது என்பதனையும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதனையும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

May be an image of 4 people, people standing, people sitting and indoor

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது என்பதனையும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதனையும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் அலரி மாளிகையில் இன்று பிற்பகல் அவரைச் சந்தித்த போதே பிரதமர் அவர்கள்  இதனைத் தெரிவித்தார்.

வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்களை உள்ளடக்கிய தொழில் வல்லுனுர்கள் சங்கத்தில் முப்பத்துரெண்டு தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 52 தொழிற்சங்கங்கள் உறுப்பினராக இருக்கின்றன.

அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் நிபுணர்களின் உதவியை பெற்றுக் கொடுப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் துலித் பெரேரா இதன்போது தெரிவித்தார்.

அமைச்சுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் இணைந்து நாட்டின் பொருளாதாம் மற்றும் அபிவிருத்திக்காகச் செயற்படுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்ட பிரதமர், தொழிற்துறை நிபுணர்களாக நாட்டிற்காக அவர்கள் மேற்கொண்ட உதவிகளுக்கு பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலத்திற்காக, ஒர் அரசாங்கம் என்ற ரீதியில், பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒத்துழைப்பை தொழில் வல்லுனர்கள் சங்கத்திற்குத் தாம் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும்  பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அங்கு குறிப்பிட்டார்.

மேற்படி சந்திப்பில் -  இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ருச்சிரா குணசேகர, உபாலி ஜயவர்தன, பந்துல பத்மசிறி, சாந்த செனரத், எச். பீ. ஆர். கே. ரூபசிங்க, பிரதமரின் மேலதிக் செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன, பிரதமரின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் அனுராதா ஹேரத்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

May be an image of 8 people, people sitting, people standing and indoor

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட...

2024-12-10 16:26:09
news-image

எல்ல பகுதியில் அதிகரிக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு...

2024-12-10 16:20:20
news-image

முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி !

2024-12-10 16:17:47
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல்...

2024-12-10 16:18:57
news-image

மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்த இளைஞன் வாகனம்...

2024-12-10 16:15:28
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய...

2024-12-10 15:47:00
news-image

கிளப் வசந்த படுகொலை ; 8...

2024-12-10 15:48:42
news-image

சகலருக்கும் குறைந்தபட்ச உணவுத்தேவை : உணவுக்...

2024-12-10 15:40:23
news-image

மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின்...

2024-12-10 15:20:48
news-image

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம்...

2024-12-10 15:11:41
news-image

பொகவந்தலாவையில் என்.சி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-10 15:00:39
news-image

மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவர்...

2024-12-10 14:40:31