(ஜெ.அனோஜன்)

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் காரணமாக அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளிலுள்ள அனைத்து தரங்களுக்கும் எதிர்வரும் பெப்ரவரி 7 முதல் மார்ச் 07 ஆம் திகதி வரை விடுமுறை வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த தகவலை கல்வியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது.

முன்னதாக உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலை விடுமுறை காலத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று கல்வியமைச்சு கூறியிருந்தது.

இந் நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.