உணவு, மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண

By T. Saranya

02 Feb, 2022 | 04:32 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்திருக்கின்றது. ஆனால் இதன் உண்மை நிலைமையை வெளிப்படுத்தி அதற்கு தீர்வுகாண அரசாங்கம் தயார் இல்லை.

அத்துடன் நாட்டில் கைவசம் இருக்கும் அந்நிய செலாவணி ஒரு மாத காலத்துக்கும் போதாது. அதனால் உணவு மாத்த்திரமல்லாது மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கின்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

லங்கா சமசமாஜ கட்சி ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு வியாழக்கிழமை (2) கொழும்பில் என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பாரியதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருப்பது அனைவரும் தெரிந்த விடயம். என்றாலும் இதற்கு முகம்கொடுத்து பிரச்சினைக்கு தீர்வுகாண பல யோசனைகளை அரசாங்கத்துக்கு முன்வைத்திருக்கின்றோம். 

குறிப்பாக 1970 காலப்பகுதியில் இதனை விடவும் பாரியதொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. 

எரிபொருட்களின் விலை 9மடங்கு அதிகரித்தது. 40 தங்க காசுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனி 600தங்க காசுகள் வரை அதிகரித்தது. அதேபோன்று வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவகையில் பாரியதொரு வரட்சி ஏற்பட்டது. அதனால் விவசாய பாதிக்கப்பட்டு உணவஏனைய பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டது.

என்றாலும் இதனை சமாளிக்க அன்றிருந்த நிதி அமைச்சர் என்.எம். பெரேரா நடவடிக்கை எடுத்திருந்தார். தனவந்தர்களிடமிருந்து பெறப்பட்ட வரியை 70வீதம் அதிகரித்து அதன் மூலம் பெறப்பட்ட நிதியைக்கொண்டு பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்தார். 

அதபோன்று அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். வசதி குறைந்த குடும்பத்தினருக்கு நிவாரண அட்டை வழங்கி, பட்டினியை போக்க நடவடிக்கை எடுத்தார். இவ்வாறானதொரு திட்டத்தை முன்னெடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்துக்கு திட்டங்களை சமர்ப்பித்தோம்.

அத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினை தொடர்பாக ஆளும் கட்சி பாராளுமன்ற கூட்டங்களிலும் எமது 11 கட்சிகள் அடங்கிய கூட்டங்களிலும் நாங்கள் கலந்துகொண்டு கலந்துரையாடும்போது பிரச்சினைக்கு தீர்வுகாண முறையான யோசனைகள் தெரிவிக்கப்படுவதில்லை. 

ஒருசிலர் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டும் என தெரிவிக்கின்றனர். ஐ.எம்.எப். செல்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களின் நிபந்தனைகளை எங்களால் நிறைவேற்ற முடியுமா என பார்க்கவேண்டும். ஆனால் நாடு எதிர்கொண்டுள்ள உண்மையான பிரச்சினையை வெளிப்படுத்தி அதற்கு தீர்வுகாண அரசாங்கம் தயார் இல்லை.

மேலும்  வெளிநாட்டு கையிருப்பு பாரியளவில் குறைந்துள்ளது. குறிப்பாப 2021 நடுப்பகுதில் அன்னிய செலாவணி 7.1 பில்லியன் கைவசம் இருந்தபோதும் கடந்த 3 மாதங்களில் அது 1.3 பில்லியன் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த தொகை வெளிநாடுகளில் இருந்து நாங்கள் இறக்குதி செய்யும் பொருட்களை ஒரு மாதத்துக்குகூட இறக்குமதி செய்ய போதுமானதாக இல்லை. 

அதனால் தற்போது பொருட்களை இறக்குதி செய்ய வங்கிகள்  நாணயக் கடிதம் திறப்பதற்கும் மறுத்து வருகின்றது. இதன் காரணமாக உணவு பொருட்கள் மாத்திரமல்ல மருந்து பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தில் இருக்கும் ஒருசில் அரசியல்வாதிகள் மற்றும் திறமையற்ற அதிகாரிகளின் செயற்பாடுகளே இந்த பிரச்சினை தீவிரமடைய காரணமாகும். உரப்பிச்சினைக்கும் இதுவே காரணம். 

இரசாயன உரத்தை உடனடியாக தடை செய்ததன் விளைவே விவசாயம் பாதிக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05