ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கக் கோரி தோட்டத் தொழிலாளர் 12 ஆவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நோர்வூட் பகுதியில் தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 தமக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வும் ஆறு நாள் வேலைநாட்களும் பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.