மட்டு ஏறாவூரில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு பிணை

By T Yuwaraj

02 Feb, 2022 | 06:44 PM
image

மட்டு ஏறாவூரில் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் முகநூலில் மாவீPரர் தினத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரின் உருவப்படம் அடங்கிய படங்களை முகநூலில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.We Must Respect Court Orders To Preserve Our Democracy And Rule Of Law -  Amnesty International Kenya

 இவர்கள் தலா 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் மாதத்தில் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொழுத்து இடுமாறும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி இன்று   புதன்கிழமை (02) உத்தரவிட்டு பிணையில் விடுவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அரசால் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மாவீரர்தினத்தையிட்டு விடுதலைப் புலிகளின் தலைவரின் உருவப்படம் அடங்கிய படங்களை முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கே.ஜெகன், வை. யோகேஸ்வரன், டபிள்யூ. விவேக், கே. சோபானந்தன் ஆகியோர் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.   

இந்த நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இவர்களின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது  இவர்களை பிணையில் விடுவிக்குமாறு சட்டமா அதிபரினால் கடிதம் அனுப்பப்பட்டதையடுத்து, இவர்கள் நான்கு பேரையும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 12 மணிக்கு முன்னர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொழுத்து வைக்குமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்துள்ளார் 

இதேவேளை அதே தினத்தில்,தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின்  உருவம் அடங்கிய புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக்கில்  பதிவிட்ட குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்ட வாகரை புளியங்கண்டலடியைச் சேர்ந்த 30 வயதுடைய கு.விஜயதாஸவை, கடந்த மாதம் (27) வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பசில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான  சரீரப் பிணையில் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், வாகரை பொலிஸ் நிலையத்தில் பகல் 12 மணிக்கு முன்னர் கையொழுத்து வைக்குமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33