அஜித் குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் 'வலிமை' படம் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'வலிமை'. இதில் அஜித் குமார் பொலிஸ் அதிகாரியாகவும், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, மூத்த நடிகை சுமித்ரா, ஜி எம் சுந்தர், புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
பொலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் பொங்கலன்று வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக தற்போது இப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'வலிமை' திரைப்படம், பெப்ரவரி மாதம் 24ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'வலிமை' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருப்பதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM