சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி மோதியதில் மூன்று வாகனங்களுக்கு சேதம் - இருவர் படுகாயம்

By T Yuwaraj

02 Feb, 2022 | 12:56 PM
image

கஹதுடுவ, பொல்கசோவிட்ட பிரதேசத்தில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில். பல வாகனங்கள் சேதமாகியுள்ளன.

மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் கார் ஒன்றின் மீது லொறி மோதியதன் பின்னர் மின்சார உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிலியந்தலையில் இருந்து மத்தேகொட நோக்கி பயணித்த லொறி பிரேக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மின்சார உபகரண விற்பனை நிலையம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right