கதிர்காமம் ருஹுனு மஹா தேவாலயத்திற்கு சொந்தமான “பானு” என்ற யானையை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த “பானு” என்ற யானையின் அனுமதிப்பத்திரத்தில் உள்ள முரண்பாடுகள் காரணமாக யானை வனவள திணைக்களத்துக்குட்பட குற்றப்புலனாய்வு பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னரும் குறித்த தேவாலயத்தின் “சமோதி” என்ற யானை வனவள திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.