11 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான யூரோக்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற குற்றச்சாட்டுக்காக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Lankadeepa Online

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்கள் இருவரும் இன்று காலை டுபாய் நோக்கி புறப்பட்டவிருந்த வேளையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் பயணத் பொதியிலிருந்து 46,000 யூரோக்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.