கொவிட்-19 பரவலால் உருவாகும் மருத்துவ கழிவுகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

By Vishnu

02 Feb, 2022 | 10:53 AM
image

(ஜெ.அனோஜன்)

கொவிட்-19 தொற்றுநோயால் உருவாகும் கழிவுகளின் அளவு சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.

Masses of COVID medical waste pose health hazard - WHO

பயன்படுத்தப்படும் ஊசிகள் போன்ற மருத்துவ உபகரணங்களால் உடல்நலக் கேடு ஏற்படுவதாகவும், பிளாஸ்டிக் கழிவுகளின் அதிகரிப்பு கழிவு மேலாண்மை அமைப்புகளை சிரமப்படுத்துவதாகவும் ஸ்தபானம் கூறுகின்றது.

அதேநேரம் உற்பத்தியாளர்கள் அதிக மக்கும் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மருத்துவ பொருட்களை பயன்படுத்துவதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அழைப்பு விடுத்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயால் உருவாகும் கழிவுகளில் பொருட்களில் பாதுகாப்பு உடைகள், ஊசிகள், கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் சோதனைக் கருவிகள் ஆகியவை அடங்கும்.

தொற்றுநோய் பரவிய முதல் மாதங்களில் ஐ.நா.வினால் விநியோகிக்கப்பட்ட 1.5 பில்லியன் மருத்துவப் பொருட்களில் பெரும்பாலானவை 262,000 ஜம்போ ஜெட் விமானங்களின் எடைக்கு சமமான கழிவுகளை கொண்டமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right