விக்ரம் பிரபு நடிக்கும் 'டைகர்'

02 Feb, 2022 | 11:49 AM
image

விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'டைகர்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'டைகர்'

இதில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். 

இரண்டாவது நாயகியாக புதுமுக நடிகை அனந்திகா அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர் டேனியல் ஆனி போப் நடிக்கிறார். நடிகர் சக்தி வாசு முதன் முறையாக இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். படத்தின் திரைக்கதை, வசனத்தை இயக்குநர் முத்தையா எழுதியிருக்கிறார். சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,'' சென்னையை கதைக்களமாக கொண்டு 'டைகர்' படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. 

சென்னையில் நடக்கும் ரவுடியிஸ் நிகழ்வுகளில் நாயகன் எதிர்பாராமல் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறோம். இந்தப் படத்திற்காக சென்னையில் பெரிய அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் முத்தையா திரைக்கதையில் ஆக்ஷன் திரில்லர் ஜேனரில் விக்ரம்பிரபு நடிப்பதால் 'டைகர்' படத்திற்கு தொடக்க நிலையிலேயே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right