(ஜெ.அனோஜன்)

கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் மொத்தமாக 82,327 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு வருகை தந்தவர்களில் அதிகளவானோர் ரஷ்ய நாட்டவர்கள் ஆவர்.

அதன்படி 13,478 ரஷ்ய நாட்டவர்களும், அவர்களுக்கு அடுத்தபடியாக 11,751 இந்தியர்களும், 7,774 உக்ரேனியர்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1,682 சுற்றுலப் பயணிகள் வந்த நிலையில் இவ்வாண்டு முதல் மாதத்தில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

No photo description available.