சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' வெளியீட்டு திகதி அறிவிப்பு

By T Yuwaraj

01 Feb, 2022 | 07:56 PM
image

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் புதிய வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராஜ்கிரண், சத்யராஜ், வினய் ராய், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாரான நிலையில் கொரோனா தொற்று காரணமாக படத்தின் வெளியீட்டு திகதி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில்  பெப்ரவரி 1ஆம் திகதி முதல் தமிழகத்தில் கொரோனாத் தொற்று குறைந்து வருவதன் காரணமாக பட மாளிகைகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் மாதம் 10ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' பட மாளிகையில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்