நாட்டில் பல பகுதிகளில் மின்தடை

Published By: Digital Desk 4

01 Feb, 2022 | 04:52 PM
image

நாட்டில் இன்று  பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் தடை தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் : இலங்கை பொதுப்  பயன்பாடுகள் ஆணைக்குழு | Virakesari.lk

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாவது மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மின்பிறப்பாக்கி நேற்று (31) திருத்தியமைக்கப்பட்டதாக தெரிவித்த இலங்கை மின்சார சபை, அதன் பின்னர் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த செயலிழப்பு காரணமாக தேசிய மின்கட்டமைப்பு 270 மெகாவாட் மின்சாரத்தை இழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுரைச்சோலையில் உள்ள மின்பிறப்பாக்கி செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபையின் வட்டாரங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17