காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு காண்பது ஒரு முக்கிய விடயமாகும் - அரசாங்கம்

01 Feb, 2022 | 04:44 PM
image

(எம்.மனோசித்ரா)

காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிந்து தீர்வு காண்பது நீதியமைச்சரின் வடக்கு விஜயத்தில் ஒரு முக்கிய விடயமாக உள்ளது. 

காணி விவகாரங்கள் உள்ளிட்ட ஏனைய சட்ட நடவடிக்கைகளை போன்று காணாமலாக்கப்பட்டோர் விடயம் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. 

ஆனால் இந்த விடயத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடுகள் இருக்காது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கொழும்பில் திங்களன்று விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 

இந்நிலையில் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய பிரகீத் எக்னலிகொட உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை? 

மற்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த போது சமூக வலைத்தளங்கள் தொடர்பில் முன்வைத்த யோசனை கருத்து சுதந்திரத்தை முடக்குவதாக அமைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு யாது என 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்டக்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஒழுங்குமுறையுடன் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் எவ்வித தடைகளோ அல்லது புதிய சட்ட விதிமுறைகளோ நடைமுறைப்படுத்தப்படவில்லை.

காணாமல் போனோர் மற்றும் அது தொடர்பான அலுவலக நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி முன்னெடுத்து வருகின்றார். 

அதற்கமைய நீதி அமைச்சரின் வடக்கு விஜயத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியமான விடயமாகவுள்ளது.

மேலும் காணி விவகாரங்கள் உள்ளிட்ட ஏனைய சட்ட நடவடிக்கைகளை போன்று காணாமலாக்கப்பட்டோர் விடயம் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. 

எவ்வாறிருப்பினும் இது தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவையின் பிரதான வேலைத்திட்டம் காணிகள் உள்ளிட்ட சட்ட ரீதியான விடயங்களைப் போன்றே காணாமல் போனோர் தொடர்பிலும் அவர்களின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகும்.

அந்த நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் வழங்கப்படக் கூடிய உச்சபட்ச ஒத்துழைப்பினை வழங்க தொடர்ந்தும் செயற்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04