விளாடிமிர் புடின் - இம்ரான் கான் பெய்ஜிங் சந்திப்பு இரத்து

01 Feb, 2022 | 04:35 PM
image

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான உச்சிமாநாட்டைத் தவிர இருதரப்பு சந்திப்புகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நடத்தமாட்டார் என்றும் இதனடிப்படையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

பெப்ரவரி 4 ஆம் திகதி பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் மற்ற தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிடவில்லை என்று  ரஷ்ய அரச செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

விழாவின் அமைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட விளையாட்டு வீரர்கள் மற்றும் விருந்தினர்கள் மீது சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம் . 

எனவே பெய்ஜிங் பயணத்திற்கான ரஷ்ய ஜனாதிபதியின் அட்டவணையில் வெளிப்படையான காரணங்களுக்காக இருதரப்பு சந்திப்புகள் எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

விளாடிமீர் புடின்  பிப்ரவரி 4 ஆம் தேதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

சீனாவில் பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பை ரஷ்ய ஜனாதிபதி தவிர்க்கும் முடிவு இந்தியாவில் வரவேற்கப்படும். ஏனெனில் ரஷ்ய அதிபர் இந்திய உணர்திறனைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கலாம் என  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

பாகிஸ்தானின் நெருங்கிய  நண்பரான சீனாவில் புடின்-இம்ரான் சந்திப்பு குறித்து பாகிஸ்தானில் தீவிர ஊக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் சமீபத்தில் ஜனாதிபதி விளாடிமீர் புடினை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் கலந்துரையாடினார்.

மறுப்புறம் ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான்களின் சூழலில் பாகிஸ்தானுடன் ரஷ்யாவின் ஈடுபாடு குறித்து பல அச்சங்களும் உள்ளன. 

இருப்பினும், ரஷ்யா-பாகிஸ்தான் உறவுகள் இயற்கையிலும் நோக்கத்திலும் வரையறுக்கப்பட்டவை.  காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ரஷ்யா அனைத்து தளங்களிலும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-30 16:43:03
news-image

ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான...

2022-09-30 22:20:49
news-image

10 ஆயிரம் கோடி இந்திய ரூபா...

2022-09-30 13:48:05
news-image

ரஷ்யா - உக்ரைன் போர் :...

2022-09-30 13:47:27
news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -...

2022-09-30 12:11:12
news-image

வளர்ப்பு மகனை தவறான வழிக்குச் செல்ல...

2022-09-30 13:43:09
news-image

பெண்­ணாக மாறு­வ­தற்கு முன் 7 சிறார்­களை...

2022-09-30 13:42:26
news-image

3 ஆம் சார்ள்ஸ் மன்னரின் உருவம்...

2022-09-30 13:41:21
news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25