வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, மீனவ சங்கங்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

வட மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ! | Virakesari.lk

அண்மைய நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ். மாவட்ட மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றார்.

தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை முன்வைக்கக் கோரி, பிரதான போக்குவரத்துத் தடங்களை இடைமறித்து மீனவர்கள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த போதும், சமரசம் ஏற்படவில்லை.

இந்நிலையில், மீனவ அமைப்புக்களை கலந்துரையாடலுக்கு வருகை தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை காலை பத்து மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.