ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

By T Yuwaraj

01 Feb, 2022 | 01:17 PM
image

காலி, ரத்கம - வில்லம புகையிரத கடவையில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

Articles Tagged Under: accident | Virakesari.lk

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது மாமியார், உறவினர் என மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

அத்தோடு, விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியின் மனைவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகையிரத சமிக்ஞைகள் செயலிழந்த நிலையில் முச்சக்கரவண்டி தண்டவாளத்தின் ஊடாக பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right