ஹப்புத்தளை நகரில், நேற்று 31-01-2022 மாலை, கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி ஆபத்தான நிலையில், தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

Articles Tagged Under: கத்திக்குத்து | Virakesari.lk

ஹப்புத்தளை நகர உணவகமொன்றில் , கடந்த ஐந்து மாத காலமாக பெண் ஒருவர் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், குறித்த பெண் தொழில் செய்யும் உணவகத்திற்கு கத்தியுடன் வந்த அப்பெண்ணின் கணவன் , தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதையடுத்து படுங்காயங்களுக்குளான மனைவியை, அங்கு கூடியவர்கள் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவர் அங்கு தீவிர சிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரின் நிலை கவலைக்கிடமான இருந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கத்தியால் குத்திய நபர் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் ஹப்புத்தளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.