முன்னாள் அமைச்சர்  ஏ.எச்.எம்.பௌசிக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி இவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரச வாகனமொன்றை அனுமதியின்றி பயன்படுத்தியதனூடாக 19.5 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக இவர்  மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிரான வழக்கினை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளது.