மூன்று நாள் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி  நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார். 

இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். 

சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.