பொருளாதார ரீதியான சுதந்திரத்தை அடைவதன் அவசியத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர் - கயந்த

Published By: Digital Desk 4

31 Jan, 2022 | 09:31 PM
image

(நா.தனுஜா)

சுதந்திரதினத்தை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாடவேண்டிய தருணத்தில், எமது நாடு அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குக்கூட கடன்களைக் கோரும் அளவிற்கு மிகமோசமான நிலையிலிருக்கின்றது.

74 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்திற்கான தயார்ப்படுத்தல்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற தற்போதைய சூழ்நிலையில், பொருளாதார ரீதியிலான சுதந்திரத்தை அடைந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள்.

இலங்கை மீதான நம்பிக்கையை மியன்மார் மக்களும் இழந்து விட்டனர்: கயந்த கருணாதிலக  | Virakesari.lk

எனவே அனைத்து வழிகளிலும் தோல்விகண்டுள்ள அரசாங்கத்தை ஆட்சிபீடத்திலிருந்து விரட்டியடித்து, மக்களின் பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கின்ற அரசாங்கமொன்றைத் தெரிவுசெய்யவேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கற்ற, தன்னிச்சையான தீர்மானங்களினால் நாட்டுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்தத் தொழிற்படையில் 25 சதவீதமானோர் விவசாயத்துறையுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கின்றனர். 

நாடளாவிய ரீதியில் சுமார் 18 இலட்சம் குடும்பங்கள் நெல் விவசாயத்திலும் சுமார் 22 இலட்சம் குடும்பங்கள் ஏனைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன.

அண்மையகாலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் கூறுகின்றார். இழப்பீடு வழங்குவதாகக் கூறுவதிலிருந்தே தவறு இடம்பெற்றிருப்பது தெளிவாகின்றது. 

ஆனால் விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்குவதன் ஊடாக மாத்திரம் அரசாங்கம் அதன் தவறை நிவர்த்தி செய்துகொள்ளமுடியாது. மாறாக இடம்பெற்ற தவறுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுக்கொள்வதுடன் அதனை முழுமையாக சீர்செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு இருபோகங்களுக்குமான உர நிவாரணத்தை வழங்குவதற்கு 30,000 மில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது விவசாயிகளுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கென 40,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.

ஆனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்கு அந்த நிதி போதுமானதல்ல. அதுமாத்திரமன்றி விளைச்சலில் ஏற்பட்ட வீழ்ச்சியை உரியவாறு சரியாக மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகள் எதனையும் அரசாங்கம் தற்போதுவரை முன்வைக்கவில்லை.

அதேபோன்று பெரும்போக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பிற்கான நட்டஈட்டை மாத்திரமே வழங்கப்போவதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.

அவ்வாறெனில், பாரம்பரியமாக ஏனைய பயிர்ச்செய்கை உற்பத்திகளில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் நிலையென்ன? எமது நாட்டிற்குப் பெருமளவான அந்நியச்செலாவணி வருமானத்தைப் பெற்றுத்தருகின்ற தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்கள் சுமார் 4 இலட்சம் பேர் இருக்கின்றார்கள்.  இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தினால் தேயிலை விளைச்சல் குறைவடைந்து, அவர்கள் பெருமளவு வருமானத்தை இழந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு அரசாங்கம் வழங்கப்போகின்ற தீர்வு என்ன? 

விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை உரிய காலத்தில் பெற்றுக்கொடுத்திருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடிகளைத் தவிர்த்திருக்கமுடியும். ஆனால் அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களின் விளைவாக, பலவருடகாலமாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்த எமது நாடு, இப்போது அரிசி வழங்குமாறு சீனாவிடம் கோரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தற்போது 74 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது. சுதந்திரதினத்தை மிகுந்த கௌரவத்துடன் கொண்டாடவேண்டிய தருணத்தில், எமது நாடு அத்தியாவசியப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குக்கூட கடன்களைக்கோரும் அளவிற்கு மிகமோசமான நிலையிலிருக்கின்றது. தற்போதைய அரசாங்கம் எமது நாட்டின் நன்மதிப்பை முழுமையாகச் சீர்குலைத்திருக்கின்றது. 

ஆகவே 74 ஆவது சுதந்திரதினக்கொண்டாட்டத்திற்கான தயார்ப்படுத்தல்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற சூழ்நிலையில், நாட்டுமக்கள் மத்தியில் பொருளாதார ரீதியான சுதந்திரத்திற்கான தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்தும் ஊழல்மோசடிகளிலிருந்தும் செயற்திறனற்ற தன்மையிலிருந்தும் ஏமாற்றப்படுவதிலிருந்தும் மக்கள் சுதந்திரமடையவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. 

எனவே அனைத்து வழிகளிலும் தோல்விகண்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடத்திலிருந்து விரட்டியடித்து, மக்களின் பிரச்சினைகளுக்கு உரியவாறான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கின்ற அரசாங்கமொன்றைத் தெரிவுசெய்யவேண்டியது இன்றியமையாததாகும் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58