(எம்.மனோசித்ரா)
டெல்டா பரவும் வீதம் முழுமையாகக் குறைவடைந்து , ஒமிக்ரோன் பரவல் பாரியளவில் அதிகரித்துள்ளது. நாட்டில் பிரதான வைரஸாக ஒமிக்ரோன் மாற்றமடையக் கூடும். இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்வதற்கான ஒரேயொரு வழி , மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதேயாகும். அவ்வாறில்லை என்றால் கொவிட் மாத்திரமின்றி ஏனைய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வைத்தியசாலை கட்டமைப்புக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று வைரஸ் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானகே தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தடுப்பூசியையும் மீறி கொவிட் தொற்று பரவக் கூடிய சூழலே தற்போது காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் தடுப்பூசியையும் பெற்றுக் கொண்டு இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளில் பெருமளவானோருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்படுகிறது. உலகலாவிய ரீதியில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு கொவிட் மரணம் பதிவாகிக் கொண்டிருக்கிறது. கொவிட் வைரஸ் இனங்காணப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் , மீண்டும் மீண்டும் புதிய பிறழ்வுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதே இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஒரேயொரு வழியாகும். அதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது இன்றியமையாததாகும். இதன் மூலம் கொவிட் தொற்றுக்கு உள்ளானாலும் தீவிர நிலைமையை அடைவதையும் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதையும் குறைத்துக் கொள்ள முடியும். மாறாக வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் கொவிட் நோயாளர்கள் மாத்திரமின்றி ஏனைய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து , வைத்தியசாலை கட்டமைப்புக்கள் நெருக்கடிக்கு உள்ளாகும். எனவே தான் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்ற ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்படுமாயின் 7 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் அன்றாட நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுத்துச் செல்ல முடியும். 7 நாட்கள் நிறைவடைந்ததன் பின்னர் கொவிட் பரிசோதனை செய்து கொள்வது அவசியமற்றது. தற்போது டெல்டா வைரஸ் காணப்பட்டாலும் , அதனை விட அதிகமாக ஒமிக்ரோன் வைரஸே காணப்படுகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையை விட மாறுபட்ட நிலைமையே தற்போது நாட்டில் காணப்படுகிறது.
டெல்டா பரவும் வீதம் முழுமையாகக் குறைவடைந்து , ஒமிக்ரோன் பரவல் பாரியளவில் அதிகரித்து நாட்டில் பிரதான வைரஸாக அது மாற்றமடையக் கூடும். தற்போது எழுமாறாகவே சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. எத்தனை சதவீதம் என்பதைத் தாண்டி பெரும்பாலான பிரதேசங்களிலிருந்து பெறப்படும் மாதிரிகளில் ஒமிக்ரோன் தொற்று காணப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM