மட்டக்களப்பில் யானைக்கு வைத்த மின்சாரவேலியில் சிக்குண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு  

By T Yuwaraj

31 Jan, 2022 | 05:12 PM
image

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சக்கொடி சுவாமிமலை பிரதேசத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானைக்கு வைத்த மின்சார வேலியில் சிக்குண்டு பலியான சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றுள்ளதாக  கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த பத்து வருடங்களுக்கு மேலக தனக்கு சொந்தமான காணியினை பராமரிக்கும் பொருட்டு அங்கு பயிரிடப்பட்ட பயிர்களை பாதுகாத்து வருவதாகவும், அவர் தனது காணியினை சுற்றி யானைகள் உட்பிரவேசிக்காமல் சட்டவிரோதமான முறையில் மின்சார வேலிகளை அமைத்து தனது செய்கைபண்ணப்பட்ட காணியினை பாதுகாரத்து வந்ததாகவும் அறியமுடிகின்றது.

 இந்நிலையில் சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து தனது காணிக்கு சென்ற வீடு திரும்பாத நிலையில் அவரின் மனைவி குறித்த இடத்திற்கு சென்ற போது மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்து இருந்ததாகவும் குறித்த நபர்  அண்மையில் யானையின் தாக்குதலுக்கு அகப்பட்டு உயிர் தப்பியவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின போது தெரியவந்துள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவானின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மொரட்டுவையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு :...

2022-11-28 13:55:15
news-image

இலங்கையை தமது பொறிக்குள் சிக்க வைக்க...

2022-11-28 13:59:49
news-image

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு...

2022-11-28 13:58:20
news-image

மாணவர்களுக்கு போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த...

2022-11-28 13:46:26
news-image

அரசாங்க உற்சவத்திற்கோ அல்லது நிகழ்விற்கோ அரச...

2022-11-28 13:39:10
news-image

ஆரையம்பதியில் ஆணின் சடலம் மீட்பு

2022-11-28 13:56:31
news-image

மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவைகள்...

2022-11-28 13:25:38
news-image

கசினோ சட்டமூலத்துக்கு அரச நிதிக்குழு அனுமதி...

2022-11-28 13:13:30
news-image

காரைநகரில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக கவனயீர்ப்பு...

2022-11-28 13:18:39
news-image

நோயாளியை பார்க்கச் சென்றவர் மீது பாதுகாப்பு...

2022-11-28 13:56:09
news-image

ஓமான், ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள 154...

2022-11-28 13:07:38
news-image

பஷில் விமான நிலையத்திற்குரிய கட்டணத்தை செலுத்தியுள்ளார்...

2022-11-28 12:15:41