தேசிய தொழில் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழா 2022 ; Dialog Enterprise அனுசரணை

By T. Saranya

31 Jan, 2022 | 04:58 PM
image

இலங்கையின் கைத்தொழில்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள்  புதிய இயல்புநிலையில் புத்துயிர் பெறுவதற்காக அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, டயலொக் ஆசிஆட்டாவின் கார்ப்பரேட் தீர்வுகள் பிரிவான Dialog Enterprise 2022 தேசிய தொழில் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழாவிற்கான   அனுசரணையை வழங்குவதாக அறிவித்துள்ளது.  இந்த நிகழ்விற்கு Dialog Finance மற்றும் Dialog genie உத்தியோகப்பூர்வ கொடுப்பனவு பங்காளராகவும் FinTech பங்காளராகவும்  செயல்படுகின்றன.

கைத்தொழில் அமைச்சின் அனுசரணையில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய தொழில் கண்காட்சியானது பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  உற்பத்தி, வர்த்தகம், கட்டுமானம் மற்றும் பல தொழில்துறைகளைச் சேர்ந்த பல தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கண்காட்சியாளர்களைக் உள்ளடக்கியுள்ளது. 

இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக அதிமேதகு ஜனாதிபதி கௌரவ கோட்டாபய ராஜபக்க்ஷ உட்பட, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் இந்தோனேசியா தொழில்துறை அமைச்சர் கௌரவ. அகஸ் குமிவாங் கர்தசஸ்மிதா ஆகியோரின் முன்னிலையில் தேசிய கைத்தொழில் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்படும்.   

இந்நிகழ்வின் போது  உரையாற்றிய கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, “கொவிட்-19 மீட்சிக்கு கைத்தொழில்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆதரிப்பது மிகவும் முக்கியமானது மற்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மறுமலர்ச்சிக்கு சிறு வணிகங்களின் அதிக பங்களிப்பை வழங்க செயல்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். தொற்றுநோயிலிருந்து வலுவாக மீள்வதற்கு, பொது மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்து பணியாற்றுவது மிக அவசியமாகும்.

மேலும் இந்த முன்னணியில் தங்கள் ஆதரவை வழங்க முன்வந்ததற்காக Dialog Enterprise, Dialog Finance மற்றும் genie ஆகியோருக்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக  திகழ்வோம். இலங்கை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும் மாற்றுவதற்கும் கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் Dialog Enterprise, Dialog Finance மற்றும் genie ஆகியவற்றின் ஒன்றிணைந்த பலத்துடன் நீண்ட கால அடிப்படையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் என மேலும் தெரிவித்தார். 

Dialog Enterprise இன் குழும பிரதம அதிகாரி நவீன் பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,  “தொற்றுநோயின் பின்னணியில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புத்தாக்கம் மற்றும் வாய்ப்புகளைத் தேடும் இயல்பு காரணமாக இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிவதுடன், மேலும் இலங்கையை சிறந்த முறையில் மீளக் கட்டியெழுப்புவதற்கு அவை முக்கிய பங்களிப்பினை வழங்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். 

சிறு வணிக நடவடிக்கைகளில் இந்த மீள் எழுச்சியை விரைவுபடுத்துவதற்காக, இலங்கையின் கைத்தொழில் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை தொழிற்துறை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து ஆதரிப்பதற்காக தேசிய தொழில் கண்காட்சியின் அனுசரணையாளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மேலும் இந்த புதிய இயல்புநிலையில் தங்கள் வணிகங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு best-in-breed டிஜிட்டல் தீர்வுகள் மூலம் அதிகாரம் அளிப்போம்.  Dialog Enterprise இலங்கையின் அனைத்து துறைகளிலும் உள்ள தொழில் முயற்சியாளர்களின் உச்ச திறனை அடைவதற்கான வசதிகளை வழங்குவதற்கும் வலுவூட்டுவதற்கும் உறுதி பூண்டுள்ளது.

Dialog Finance இன் தலைவரும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும பிரதான டிஜிட்டல் சேவை அதிகாரியுமான ரேணுகா பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,  "கொவிட்-19 இன் சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிகவும் முக்கியமானதுடன், இது தொழில்துறைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை விரைவாக மாறும் நவீன உலகத்துடன் ஒத்துப்போக கட்டாயப்படுத்துகிறது. 

Dialog Finance மற்றும் genie ஆகியவை தொழிற்துறை அபிவிருத்திச் சபையுடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன் இலங்கையின் கைத்தொழில்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை புதிய இயல்புநிலையில்  மேம்படுத்துவதற்கான இந்த பகிர்ந்த நோக்கத்தை விரைவுபடுத்துவதற்கான உத்தியோகபூர்வ கொடுப்பனவு பங்காளராகவும்  மற்றும் FinTech பங்காளராகவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.  

FinTech தீர்வுகளில் முன்னணியில் திகழும் Dialog Finance மற்றும் genie ஆனது இலங்கையர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உண்மையான டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வசதியான மற்றும் அணுகக்கூடிய FinTech தீர்வுகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது.

Dialog Enterprise  இன் குழும பிரதான அதிகாரி திரு.நவின் பீரிஸ் அவர்கள்  கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு. உபசேன திஸாநாயக்கவிடம், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜெனரல் தயா ரத்நாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் வளர்ந்து வரும் வர்த்தகத்தின் தலைவர் திரு.சன்ன அமரசேகர மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி  இன் ஊடக மற்றும் வர்த்தக பிரிவு  சிரேஷ்ட பொது முகாமையாளர் திரு ஹர்ஷ சமரநாயக்க ஆகியோர் முன்னிலையில் தலைப்பு அனுசரணை உறுதிப்படுத்தலை கையளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Daraz ஊடாக கிடைக்கும் பொருளாதார சுதந்திரம்

2023-02-04 10:41:45
news-image

OPPO A Series அணிவகுப்பின் புதிய...

2023-02-03 10:59:13
news-image

SLIM Brand Excellence Awards 2022இல்...

2023-02-02 15:16:00
news-image

உதய சூரியனைப்போல் நம்பிக்கையுடைய சனிதா உருவாக்கிய...

2023-02-01 16:08:17
news-image

கொழும்பு கிளப்பின் புதிய தலைவராக முதல்...

2023-01-31 15:05:30
news-image

வரலாற்றில் முதல் முறையாக 3 பில்லியன்...

2023-01-27 15:36:26
news-image

40 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய...

2023-01-26 10:52:26
news-image

இலங்கை குழந்தைகளின் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை...

2023-01-11 14:45:57
news-image

'Lucky Freedom' (லக்கி ப்ரீடம்) புதிய...

2023-01-06 12:31:42
news-image

மக்கள் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று...

2023-01-01 12:15:59
news-image

பாத்பைன்டர் குழுமத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இந்தியாவிலுள்ள...

2022-12-23 15:08:59
news-image

DFCC வங்கி GoodLife X உடன்...

2022-12-22 15:59:53