விமானப் போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்கள் சங்கத்தினர் இரண்டாவது தடவையாகவும் ஆரம்பித்திருந்த சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

நேற்று (06) இரவு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் இடம்பெற்ற பேச்சுவாரத்தையின் பின்னர் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்து கட்டுப்பாளட்டாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர் சாதகமான தீர்வுகளை வழங்கியதன் அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக சங்கத்தின் தலைவர் திசர அமரகந்த குறிப்பிட்டார்.

இதேவேளை அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படும் வரை குறித்த விடயத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.