நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் இம்மாதம் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்  கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது