தலிபான்களுடனான நெருக்கமான உறவில் இஸ்லாமாபாத்

By T. Saranya

31 Jan, 2022 | 12:48 PM
image

(ஏ.என்.ஐ)

ஆப்கானிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள், காபூலின் விவகாரங்களில் தேவைக்கு அதிகமாக இஸ்லாமாபாத்தை ஆப்கானியர்கள் உணருவதால், தலிபானுடனான அதன் உறவுகள் வலுவடைவதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் வெளியேறியதால் காபூலின் அதிகாரத்தை கைப்பற்ற உதவுவதில் தலிபான்கள் இஸ்லாமாபாத்திற்கு ஆதரவாக இருந்ததற்காக நன்றி தெரிவித்தனர். 

தற்போது, ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தான் தேவைக்கு அதிகமாக தலையிடுவதாக பல ஆப்கானியர்கள் கருதுகின்றனர். 

ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் இஸ்லாமாபாத்தின் அனைத்து வர்த்தக வழிகளும் மூடப்பட்டதால், அதன் உதவியால் நிறைய மாற்றங்களைச் செய்ய முடியவில்லை. விவசாயப் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாக பாகிஸ்தான் இருப்பதால் பல ஆப்கானியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மறுப்புறம் எல்லை மூடப்பட்டதால் பெரும் தொகை ஆப்கானிஸ்தான் காய்கறிகள் மற்றும் பழங்கள் வீணாகின. இந்த மூடல் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அதிகாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

சமீபத்தில், பயிற்சி பெற்ற பாகிஸ்தான் நிபுணர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் இம்ரான் கான் அரசின் அறிவிப்பும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் கணக்கியல் போன்றவற்றில் தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற மனிதவளத்தை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடியைத் தவிர்க்க, நட்பு நாடுகளுடன் இருதரப்பு ஒத்துழைப்பை ஆராயவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right