( எஸ்.என்.நிபோஜன்)


கிளிநொச்சி தட்டுவன்கொட்டி பிரதேசத்தில்  வசிக்கும்  கிராம சேவகர் ஒருவர்  மறைந்திருந்து கல்லினால்  தாக்கியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்  தலையில் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,குறித்த  கிராம சேவையாளர்  வீட்டிற்கு முன்பாக மோட்டார் வாகனத்தின் ஒலி  சமிக்ஞையை  பாவித்தார்  என்ற குற்றச்சாட்டில் குறித்த கிராம சேவகர்  மறைந்திருந்து  வீதியால் சென்றவரை கல்லால் தாக்கியதாகவும் பின்னர்  அவரது குடும்பத்தினர் ஏழு பேருக்கு மேற்பட்டவர்கள்  இணைந்து தாக்குதல் நடத்தியதில்  குறித்த நபர்  மயக்கமுற்றதன் காரணமாக  கிராமமக்களால் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான நபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவரால்  கிளிநொச்சி  பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட  முறைப்பாட்டினை அடுத்து  கிளிநொச்சி பொலிசார் அவரைக் கைதுசெய்துள்ளனர்.
கிராம சேவையாளர் தனது அதிகாரத்தினை துஸ்பிரயோகம்  செய்துள்ளதாக அக் கிராம மக்கள் கிராமசேவையாளர் மீது விசனம் தெரிவிக்கின்றனர்.