தி.மு.க.வின்  ஆதிக்கம் தொடருமா?

31 Jan, 2022 | 04:31 PM
image

(குடந்தையான்)

கொரோனா தொற்று பரவலால் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. உள்ளது. 

இதனால் திட்டமிட்டபடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்று தி.மு.க. ஆதிக்கம் செலுத்துமா? இல்லையா? என்பதுதான் தற்போதைய விவாதப் பொருளாக உருவாகியிருக்கிறது.

'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஐபேக் குழுவினர் மற்றும் உளவுத் துறையினர் மூலமாக தயாரித்து, பட்டியலை தயாராக வைத்திருக்கிறார்கள். 

இந்தமுறை உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்காலத்தில் கட்சியில் ஆதரவு அதிகரிக்கும் வகையில் ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. 

புகார்களுக்கு ஆளாகாத உறுப்பினர்களில் சிலருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் பொங்கலுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தொகுப்பில் ஏற்பட்ட குளறுபடிகள், பொங்கலுக்கு பிறகு வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்புகள், எரிவாயுவுக்கு இலவச மானியம் பெண்களுக்கு உரிமைத் தொகை என்பவற்றால் டெல்டா, கொங்கு மண்டலங்கள் ஆகியவற்றில் தி.மு.க.வின் வெற்றி பாரிய அளவில் பாதிக்கப்படலாமென எதிர்வு கூறப்படுகின்றது. 

ஆளும் கட்சியான தி.மு.க. மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை, நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளாக அறுவடை செய்ய வேண்டிய அ.தி.மு.க., கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டில் இணக்கமான நிலையை உருவாக்காததால் அக்கட்சியின் வாக்குகளை எளிதாக திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியான தி.மு.க. ஈடுபடக்கூடும். 

இதனைவிட, விஜய் மக்கள் இயக்கம், ரஜினி இரசிகர் மன்றம் ஆகியவையும் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறது. இவற்றில் விஜய் மக்கள் இயக்கத்திற்கு சிறுபான்மை மக்களிடையே பாரிய ஆதரவு இருப்பதால், இந்த முறை எதிர்பார்த்ததைவிட கூடுதல் இடங்களில் அவ்வணியினர் தெரிவாகும் நிலைமைகள் ஏற்படலாம். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-30#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக...

2022-09-29 15:08:23
news-image

யார் இந்த பொன்னியின் செல்வன்?

2022-09-29 15:25:42
news-image

முதல் முறையாக விண்கல்லை திசை திருப்பிய...

2022-09-29 13:18:27
news-image

உடையால் பற்றி எரியும் ஈராக் :...

2022-09-29 13:18:49
news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02
news-image

ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர்...

2022-09-26 10:53:34
news-image

இந்தியா இலங்கைக்கு பலமாக இருக்கின்றது :...

2022-09-25 15:44:19