ஸ்ரீ அரவிந்தரின் யோக காவியம் – 05

31 Jan, 2022 | 10:21 AM
image

(ஸ்ரீ ஸக்தி சுமனன்)

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி காவியம் கூறும் மையக்கருத்து ஒரு மனிதன் தனது மனம், உடல் போன்ற கருவிகளை தெய்வீகத்துடன் இணைப்பதன் மூலம் ஒருவன் மனித உடலில் இருந்துகொண்டே தெய்வீகத்தன்மையை அனுபவிக்க முடியும். 

இப்படி மனிதகுலத்தில் உள்ள அனைவரும் அல்லது பெரும்பாலானோர் மாறமுடியும் என்றால் இந்தப் பூவுலகம் தெய்வ சக்தி நிறைந்த ஒரு இலட்சிய பூமியாக இருக்கும் என்பதே ஸ்ரீ அரவிந்தரின் யோக இலட்சியம். 

இதை எப்படி அடைவது என்ற வரைபடமே ஸாவித்ரி மகாகாவியம்.

உலக பரிணமத்தின் போக்கு 

உலக சரித்திரத்தை உற்று நோக்கும் போது உலகம் ஒரு வட்டமான பரிணாம சுழற்சிக்குள் செல்வதை அவதானிக்க முடியும். 

ஒரு வட்டம் முடிவுற்று அடுத்த வட்டம் ஆரம்பமாகும் போது அதற்கு முன்னர் நடைபெற்ற சுழற்ச்சிபோல் அச்சொட்டாக ஒருபோதும் இருக்காது. 

அதோபோல் அந்த வட்டம் முன்னர் நடைபெற்ற வட்ட த்தினை விட மேம்பட்ட தாக நவீனத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 

முன்னர் நடைபெற்ற வட்டம் அடுத்த சுழற்ச்சிக்குரிய அடிக்கல்லாக இருக்கும். பழைய கலாச்சாரப் பெறுமான ங்கள் மறைந்து புதியவை தோன்றும். 

புதிய கலாச்சாரம், தோன்றுவதற்கு அறிகுறியாக ஒரு பெரிய குழப்பம், அதிர்வு தோன்றி பழையவற்றை உருக்குலைக்கும். இப்படியொரு மனித குலத்திற்கான புதியதொரு தெய்வீக மாற்றம்தான் ஸ்ரீ அரவிந்தரின் யோக காவியமான ஸாவித்ரி காவியம்.

ஸ்ரீ அரவிந்தரின் சத்தியம் பற்றிய கோட்பாடு 

ஸ்ரீ அரவிந்தர் அறுதியான உண்மை என்ற என்ற ஒற்றைக் கோட்பாடு இருக்க முடியாது என்பதை விளக்குகிறார். 

மனிதனது உணர்வு அல்லது ஆன்மா ஒவ்வொரு நிலையைக் கடக்கும் போது அது இருக்கும் நிலைக்குத் தக்க அது உணர்பவை அனைத்தும் அதற்கு அந்த ஆன்மாவின் உணர்வு நிலைக்குத் தக்க சத்தியமாக இருக்கும். 

ஸ்ரீ அரவிந்தரைப் பொறுத்தவரையில் மனித உணர்வின் பயணம்தான் வாழ்க்கை. இந்தப்பயணத்தில் ஒவ்வொரு நிலையிலும் அந்த மனிதனின் உணர்வு அனுபவிக்கும் உண்மையை அவன் சத்தியம் என்று கருதிக்கொண்டு பரிணாமத்தில் உயர்ந்து கொண்டு செல்கிறான். 

அவனால் அடையப்பட்ட அதியுயர் உணர்வை அவன் இறுதியான சத்தியம் என்று நம்புகிறான். 

ஆனால் எதிர்காலத்தில் இன்னும் உணர்வு பயணிக்கத் தொடங்கும் போது அதற்கு மேலுள்ளவற்றை சத்தியமாக அடைவான் என்கிறார்.

ஒவ்வொருவரும் இப்படி ஒவ்வொரு நிலையை அடைந்தவுடன் அடையப்பட்ட அறிவின் காரணமாக அந்த நிலைதான் உண்மை என்று நம்பி அதைச் சுற்றி வேலி போட்டு அந்த நிலையில் தங்குவதற்கு முயற்ச்சிக்கிறார்கள். 

ஆனால் இவை அனைத்தும் ஒரு இடை நிலையே மனிதன் தனது உணர்வினை மென்மேலும் உயர்த்திக்கொண்டு இந்தப்பயணத்தைத் தொடரவேண்டும்.

இந்தக்கருத்தை ஒட்டியே ஸாவித்ரி காவியம் படைக்கப்பட்டுள்ளது. 

ஸாவித்ரி காவியத்தின் அஸ்வபதி என்ற பாத்திரப்படைப்பு மேற்குறித்த உண்மையினையே குறிக்கிறது.

உணர்வானது மனதின் துணை இல்லாமல் எப்படி வளர்ச்சியுற்று ஆழமாகச் செல்லும் அதேவேளை எவ்வளவு அகலமாக அனுபவத்தைப் பெறவேண்டும் என்பது பற்றியும் ஸாவித்ரி உரையாடுகிறது.

ஸாவித்ரி ஒரு மந்திர மலா 

மந்திர மாலா என்பது கோர்வையாக கோர்க்கப்பட்ட மந்திரச் சொற்கள். 

இத்தகையவை மீண்டும் மீண்டும் படித்து மனனிக்கும் போது மனிதனிற்கு பிராண ஆற்றலை உருவாக்கி உயர்வடையச் செய்யக்கூடியவை.

இவை பிராண ஆற்றலை பிறப்பித்து உணர்வினை உயர் நிலைக்குச் செலுத்தக்கூடியவை. 

இத்தகைய மந்திர ஆற்றலுடைய ஒரு காவியம்தான் ஸாவித்ரி. 

இதை வெறுமனே ஆங்கிலத்தில் இலக்கியச் சுவை அறியப்படிப்பதால் இதன் பலனைப் பெற முடியாது. 

மிகுந்த கவனத்துடன் பாராயணம் செய்யும் மன நிலையில் தொடர்ச்சியாகப் படிபதன் மூலம் ஒருவன் தனது உணர்வை உயர் யோக நிலையில் இருத்தி தன்னுள் ஆற்றலை ஈர்க்க முடியும்.

(தொடரும்….)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right