படுகொலைச் செய்யப்­பட்ட சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் கொலை சந்­தேக நபர்­களைத் தேடிய விசா­ர­ணைகள் புதிய கோ ணத்தில் திருப்­பப்­பட்­டுள்­ளன. கல்­கிஸை பொலிஸ் நிலை­யத்தில் இருந்து காணாமல் போன­தாக கூறப்­படும் லசந்த விக்ரமதுங்­கவின் குறிப்புப் புத்­தகம் மற்றும் அது தொடர்­பி­லான பதி­வு­களைக் கொண்­டி­ருந்த கல்­கிஸை பொலிஸ் நிலை­யத்தின் அன்­றாட தகவல் புத்­த­கத்தின் பக்­கங்கள் தொடர்பில் இந்த விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இது தொடர்­பி­லேயே கடந்த வாரம் முன் னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­கி­ர­ம­ரட்ன, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஹேமந்த அதி­காரி மற்றும் அப்­போ­தைய பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் மகேஷ் பெரேரா ஆகியோர் விசா­ரிக்­கப்­பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­ட­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

எவ்­வா­றா­யினும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்ன தனக்கு குறித்த குறிப்புப் புத்­தகம் தொடர்பில் எவ்­வித தக­வலும் தெரி­யாது என விசா­ர­ணை­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.

கடந்த 2009 ஜன­வரி 8ஆம் திகதி கொலை செய்­யப்­பட்ட லசந்த விக்­ர­மதுங்க கொலை செய்­யப்­பட முன்னர் அவ­ரது காரை பின் தொடர்ந்து வந்த கொலை­யா­ளி­களின் வாகன இலக்­கத்தை குறிப்புப் புத்­த­கத்தில் பதிவு செய்­தி­ருந்­த­தாக விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது. அவரை யாரோ துரத்­து­ கி­றார்கள் என தெரிந்­ததும் அப்­போ­தைய அரசின் முக்­கிய நபர் ஒரு­வ­ருக்கு லசந்த விக்­ர­ம­துங்க தொலை­பே­சி­யூ­டாக விட­ய த்தை தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார். அவர் உடனே வாகன இலக்­கத்தை கேட்ட போது தனது காரின் பக்க வாட்டு கண்­ணா­டி­யூ­டாக பார்த்து அதனை தனது குறிப்புப் புத்­த­ கத்தில் பதிவு செய்­துள்ள லசந்த அதனை குறித்த முக்­கி­யஸ்­த­ருக்கு அறி­விப்­ப­தற்குள் கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இந் நிலை­யி­லேயே குற்றம் இடம்­பெற்ற இடத்தை சோதனைச் செய்த கல்­கிஸை பொலிஸார் அந்த குறிப்புப் புத்­த­கத்தை மீட்­டுள்­ளனர். அது தொடர்­பி­லான தக­வல்­களை பொலிஸில் அன்­றாடம் தக­வல்­களை பதிவு செய்யும் பதிவுப் புத்­த­க­மான ஆர்.ஐ.பி. புத்­த­கத்­திலும் எழு­தி­யுள்­ளனர்.

பின்னர் அப்­போ­தைய பொலிஸ் மா அதி­பரின் பெயரைப் பயன்­ப­டுத்தி அந்த குறி ப்புப் புத்­தகம் கல்­கிஸை பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து வெளியே எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் பொலிஸ் மா அதி­ப­ரிடம் எடுத்துச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் அந்த புத்­தகம் மிரி­ஹா­னையில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­ல­கத்­துக்கு எடுத்துச் செல்­லப்­பட்­ட­தா­கவும் தற்­போது தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எவ்­வா­றா­யினும் அந்த குறிப்புப் புத்­தகம் அப்­போ­தைய விசா­ர­ணை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து கைமாற முன்னர் புகைப்­படம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதில் குறிப்­பாக கொலை­யா­ளிகள் வருகை தந்த வாக­னத்தின் இலக்கம் எழு­தப்­பட்ட பக்கம் புகைப்­படம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த புகைப்­ப­ட­மா­னது குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்­துள்­ள­தாக கூறப்­படும் நிலை­யி­லேயே அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. எவ்­வா­றா­யினும் குறிப்புப் புத்­தகம் மீட்­கப்­பட்­டமை மற்றும் அத­னுடன் தொடர்­பு­பட்ட விட­யங்­களை பதிவு செய்­தி­ருந்த கல்­கிஸை பொலிஸ் நிலையத்தின் ஆர்,ஐ, பி. புத்­த­கத்தின் குறித்த பக்­கங்கள் மட்டும் காணாமல் போயுள்­ள­மையும் இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. இந் நிலை­யி­ லேயே பொலிஸார் சந்­தேக நபர்களைத் தேடிய விசாரணைகளை பல கோணங்களில் திருப்பியுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப் பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன்பணிப்பாளர் சிரே ஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா தலைமையி லான பொலிஸ் குழு மேலதிக விசாரணை களைத் தொடர்கின்றது.