நாட்டை முடக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியாது - பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 4

30 Jan, 2022 | 06:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஒப்பீட்டளவில் சீர்செய்துள்ளோம்.

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை மீண்டும் முடக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகள் தொடர்பில் கூடிய கவனம் : பிரசன்ன  ரணதுங்க | Virakesari.lk

குடிசைக் கைத்தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மினுவாங்கொட தொகுதியில் உள்ள 90 குடிசைக்கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு 71 இலட்சம் பெறுமதியான கைத்தொழில் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் தாக்கத்தை தொடர்ந்து வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதால் நடைமுறையில் பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளோம்.

எரிபொருள், மின்சாரம், சமையல் எரிவாயு ஆகிய அத்தியாவசிய சேவையினை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினை பிரதான காரணியாக அமைகிறது.

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் கடந்த இரண்டாண்டு காலமாக அதிக நிதியை செலவிட்டுள்ளது.நெருக்கடியான சூழ்நிலையிலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட பிரச்சினையல்ல பலம் வாய்ந்த நாடுகள் கூட கொவிட் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 30வருட கால சிவில் யுத்தத்திலிருந்து நாட்டையும்,நாட்டு மக்களையும் பாதுகாத்ததை போன்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டையும்,நாட்டு மக்களையும் பாதுகாத்துள்ளார்.

பொருளாதாரம் பாதிப்பிற்கு தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கும் எதிர்க்கட்சியினர் கொவிட் தடுப்பூசி செலுத்தல் திட்டத்திற்கு எதிராகவும் பல விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

தாக்கத்தை தீவிரப்படுத்த அதனூடாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள எதிர்தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

நாட்டை முடக்கும் நோக்கத்தில் தற்போது ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் 3 ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசிக்கு எதிராக போலியான பிரசாரங்களை முன்னெடுத்து செல்கிறார்கள்.

நாட்டை மீண்டும் முடக்கினால் பொருளாதார பாதிப்பிலிருந்து ஒருபோதும் மீள முடியாது.நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள்வதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-03-15 16:29:09
news-image

கார் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-03-15 16:18:54
news-image

தெஹிவளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-15 15:45:25
news-image

45 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2025-03-15 15:34:47
news-image

நீர்கொழும்பில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

2025-03-15 15:22:57
news-image

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம்...

2025-03-15 15:09:45
news-image

பிரபல இசைக்கலைஞர் “ஷான் புதா” உட்பட...

2025-03-15 14:48:51
news-image

சர்வதேச வர்த்தக மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

2025-03-15 14:22:12
news-image

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டதால் மலையக...

2025-03-15 14:17:53
news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56