நைஜீ­ரிய கடற்­ப­டைக்கு சொந்­த­மான போர்க்­கப்­ப­லான "யுனிட்டி" போர்க்­கப்பல் நல்­லெண்ண விஜயம் ஒன்றை மேற்­கொண்டு  கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­துள்­ளது. இலங்கை மற்றும் நைஜீ­ரிய கடற்­ப­டை­களின் கூட்டு பயிற்­சி­களை முடித்­துக்­கொண்டு இன்று மீண்டும் இந்தக் கப்பல்  நாடு திரும்­பு­கின்­றது. 

இரண்டு  நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ யம் மேற்­கொண்­டுள்ள நைஜீ­ரிய கடற்­ப­டைக்கு சொந்­த­மான போர்க்­கப்­ப­லான "யுனிட்டி" போர்க்­கப்பல் நேற்று முன்­தினம் பிற்­பகல் கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. வந்­த­டைந்த நைஜீ­ரிய போர்க்­கப்­பலை  இலங்கை கடற்­ப­டை­யினர் தமது மர­பு­க­ளுக்கு ஏற்ப வர­வேற்­றனர். அத்­துடன்   நேற்­றைய தினம் இலங்கை கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜ­ய­கு­ண­ரத்ன போர்க்­கப்­பலை பார்­வை­யிட்டார்.  நைஜீ­ரிய "யுனிட்டி" போர்க்­கப்­பலின் தள­ப­திகள்  இலங்கை கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜ­ய­கு­ண­ரத்­ன­வுடன்   நட்­பு­றவு ரீதியில்  கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தனர். 

மேலும் இந்த ஆண்டில் இது­வ­ரை­யி­லான கால­கட்­டத்தில் சர்வதேச நாடுகளை சேர்ந்த 22 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.