(ஆர்.யசி)

பயங்கரவாத தடை சட்டத்தில் பல திருத்த மேற்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன்,  1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தில் 43 ஆண்டுகளுக்கு பின்னர் சில திருத்தங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய பயங்கரவாத தடைச்சட்டம்- அமைச்சரவை கூட்டத்தில் அமளிதுமளி | Virakesari.lk

இதில் மேற்கொள்ளப்பட்டள்ள திருத்தங்களில் சட்டத்தின்  வாசகம் 2இல்,  இவ்வாசகம், தடுத்துவைத்தற் கட்டளையொன்றின் கீழ் ஆளொருவரைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கான கூட்டுமொத்தக் காலப்பகுதியைப் பதினெட்டு மாதங்களிலிருந்து பன்னிரெண்டு மாதங்களுக்குக் குறைப்பதற்கென (இதன் பின்னர் ''முதன்மைச் சட்டவாக்கம்"" எனக்குறிப்பீடுசெய்யப்படும்) 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க, பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9 ஆம் பிரிவைத் திருத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாசகம் 3இல், இவ்வாசகம், 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க, சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றிற்கெதிரான சமவாயச் சட்டத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட அளவுக்குச் சந்தேக நபர் பாதுகாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கென தடுத்துவைத்தற்கான இடத்துக்கு நீதிவான் செல்வதனை இயலச்செய்வதற்கு முதன்மைச் சட்டவாக்கத்தில் 9அ மற்றும் 9ஆ என்னும் புதிய பிரிவுகளை உட்புகுத்துவதாக திருத்தப்பட்டுள்ளது.

வாசகம் 4ல், இவ்வாசகம், முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவைத் திருத்துவதுடன் திருத்தப்பட்டவாறான பிரிவின் சட்டப்பயனானது அரசியலமைப்பின் 126 ஆம் அல்லது 140 ஆம் உறுப்புரையின்கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட பரிகாரமொன்றுக்காக விண்ணப்பிப்பதற்குத் தடுத்துவைக்கப்பட்டவர் ஒருவரை இயலச்செய்வதாகும் என திருத்தப்பட்டுள்ளதுடன்,

வாசகம் 5இல், இவ்வாசகம், விளக்கமறியலில் இடப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட ஆளொருவருக்கான அணுக்கத்தைச் சட்டத்தரணியொருவர் கொண்டிருப்பதனை இயலச்செய்வதற்கும், அவ்வாறு விளக்கமறியலில் இடப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட ஆள் தனது உறவினர்களுடன் தொடர்புகொள்வதனை இயலச்செய்வதற்கும், முதன்மைச் சட்டவாக்கத்தில் 10அ என்னும் புதிய பிரிவை உட்புகுத்துவதாகும் என திருத்தப்பட்டுள்ளது.

வாசகம் 6இல்,  இவ்வாசகம், முதன்மைச் சட்டவாக்கத்தின் 11 ஆம் பிரிவைத் திருத்துவதுடன் திருத்தப்பட்டவாறான பிரிவின் சட்டப்பயனானது அச்சட்டவாக்கத்தின் 11 ஆம் பிரிவின்கீழான கட்டளையொன்று சேர்ப்பிக்கப்படுவதற்குமுன்னர் அத்தகைய ஆள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லையென்பதனை உறுதிப்படுத்துவதற்குச் சந்தேகநபரை ஒரு சட்ட-மருத்துவ அலுவலரின்முன்னர் நிறுத்துவதனை இயலச்செய்வதாகும் எனவும் 

வாசகம் 7இல்,  இவ்வாசகம், முதன்மைச் சட்டவாக்கத்தின் 14 ஆம் பிரிவை நீக்குவதாகவும் எனவும், வாசகம் 8இல் , இவ்வாசகம், வழக்குகளைத் துரிதமாகக் கையாள்வதனை உறுதிப்படுத்துவதற்கு நாளாந்த அடிப்படையில் விளக்கங்களை நடாத்துவதற்காக ஏற்பாடுசெய்வதற்கென முதன்மைச் சட்டவாக்கத்தின் 15 ஆம் பிரிவைத் திருத்துவதாகும் எனவும் திருத்தப்பட்டுள்ளது.

வாசகம் 9இல்,  இவ்வாசகம், முதன்மைச் சட்டவாக்கத்தின் 15அ என்னும் பிரிவைத் திருத்துவதுடன்11 ஆம் பிரிவினால் செய்யப்பட்ட திருத்தத்தின் விளைவாந்தன்மையினதாகும் எனவும், வாசகம் 10இல், இவ்வாசகம், விளக்கமறியலில் இடப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட ஆட்களுக்குப் பிணைவழங்குவதற்காக ஏற்பாடுசெய்வதற்கு முதன்மைச் சட்டவாக்கத்தில் 15ஆ என்னும் புதிய பிரிவை உட்புகுத்துவதாகவும் எனவும், 

வாசகம் 11இல், இவ்வாசகம், முதன்மைச் சட்டவாக்கத்தின் 19 ஆம் பிரிவைத் திருத்துவதுடன் 7 ஆம் வாசகத்தினால் செய்யப்பட்ட திருத்தத்தின் விளைவாந்தன்மையினதாகும் எனவும் வாசகம் 12இல்,  இவ்வாசகம், முதன்மைச் சட்டவாக்கத்தின் 26 ஆம் பிரிவைத் திருத்துவதுடன் திருத்தப்பட்டவாறான பிரிவின் சட்டப்பயனானது நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட அல்லது செய்யப்பட்டதாகக் கொள்ளப்பட்ட ஏதேனும் செயலுக்காக அல்லது காரியத்துக்காக அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பைப் பொருட்படுத்தாது முதன்மைச் சட்டவாக்கத்தின் கீழ் ஆக்கப்பட்டவொரு கட்டளையை அல்லது விடுக்கப்பட்டவொரு பணிப்பைக் கேள்விக்குட்படுத்துவதற்கு ஏற்பாடு செய்வதாகும் எனவும். 

வாசகம் 13இல்,  இவ்வாசகம், ''செய்தித்தாள்"" மற்றும் ''அச்சகம்"" என்பவற்றின் வரைவிலக்கணங்களை அகற்றுவதற்கெனவும் ''சித்திரவதை"" என்னும் பதத்துக்காகப் புதியவொரு வரைவிலக்கணத்தைச் சேர்ப்பதற்கும் முதன்மைச் சட்டவாக்கத்தின் 31 ஆம் பிரிவைத் திருத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் முதன்மைச் சட்டவாக்கத்தின் 9 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவுகள் இத்தால் உட்புகுத்தப்படுகின்றனவென்பதுடன்  இவை அச்சட்டவாக்கத்தின்  9அ மற்றும்  9ஆ என்னும் பிரிவுகளாக பயனுறுதலும் வேண்டும் என இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒன்பதாம் பிரிவின்கீழ் ஆக்கப்பட்ட கட்டளையொன்று இறுதியானதாதல் வேண்டுமெனபதுடன் அரசியல் அமைப்பின் 126 ஆம் அல்லது 140ஆம் உறுப்புரையின் கீழான வழக்கு நடவடிக்கைகளில் தவிர,எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில் அல்லது ஏதேனும் சட்ட நீதிமன்றத்தில் கேள்விக்கு உற்படுத்தப்படுதளுமாகும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

15ஆ வானது, இச்சட்டத்தின் ஏற்பாடுகளில் முரணாக எது எவ்வாறிருப்பினும்  இச்சட்டத்தின்கீழ் விளக்க மறியலில் இடப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட ஆளொருவருக்கெதிரான விளக்கம் கைதுசெய்யப் பட்ட தேதியிலிருந்து பன்னிரெண்டு மாதங்கள் முடிவுற்ற பின்னர் தொடக்கியிராதிருப்பின் சந்தேக நபரினால் அல்லது அவரது சார்பில் சட்டத்தரணி ஒருவரினால் அல்லது அவரது சார்வில் சட்டத்தரணி ஒருவரினால் அதற்கெனச் செய்யப்பட்ட விண்ணப்பத்தின்மேல், மேன்முறையீட்டு நீதிமன்றம் அத்தகைய ஆணைப் பிணையில் விடுவிக்கலாம் என்பதும் உட்புகுத்தப்பட்டுள்ளது.

மேலும், வேறேதேனும் எழுத்திலான சட்டத்தின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின் கீழான ஏதேனும் தவறுக்கு ஏதேனும் நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட ஆள் ஒவ் வொருவரும், அவரது குற்றத்தீர்ப்புக்கெதிராக அல்லது அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு மனுவொன்றை  அவர் தாக்கல்செய்துள்ளார் என்பது எவ்வாறிருப்பினும், மேன்முறையீடு தீர்மானிக்கப்படும்வரை விளக்கமறியலில் வைத்திருக்கபடுத்தல் வேண்டும் ஆயின், எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றம், தகுதியானவையென மேன்முறையீட்டு நீதிமன்றம் கருதக்கூடியவாறான அத்தகைய நிபந்தனைகளுக்கமைய, அத்தகைய எவரேனுமாளை விதிவிலககான சூழ்நிலையில் பிணையில் விடுவிக்கலாம் என மாற்றீடு செய்யப்பட்டுள்ளது.