சுதந்திர கிண்ண மாகாண கால்பந்தாட்டம் : மேல், சப்ரகமுவ மாகாணங்கள் வெற்றி

Published By: Digital Desk 4

30 Jan, 2022 | 12:02 PM
image

(என்.வீ.ஏ.)

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட இரண்டாம் கட்டப் போட்டிகளில் மேல் மாகாணம், சப்ரகமுவ ஆகிய மாகாண அணிகள் வெற்றியீட்டின.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற மத்திய மாகாண அணிக்கு எதிரான போட்டியில் ஒரளவு ஆதிக்கம் செலுத்திய மேல் மாகாண அணி 3 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டியது.

இப் போட்டியில் மத்திய மாகாணம் கோல் போடும் வாய்ப்புகளை உருவாக்கிய போதிலும் அவற்றை கோலாக்க முடியாமல் போனது.

போட்டியின் 43ஆவது நிமிடத்தில் மத்திய மாகாண கோல் எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட மேல் மாகாண அணி, சஜாத் ஜசூத் மூலம் முதலாவது கோலைப் போட்டது.

இடைவேளையின் பின்னர் 49ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து பரிமாற்றப்பட்ட பந்தை சுமார் 15 யார் தூரம் தனியாக நகர்த்திச் சென்ற மொஹமத் ஹஸ்மீர் 18 யார் தூரத்திலிருந்து மிக இலாவகமாக மேல் மாகாணத்தின் 2ஆவது கோலைப் போட்டார்.

போட்டியின் 86ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம் புகுந்த நவீன் ஜூட் உபாதையீடு நேரத்தில் தனி ஒருவராக பந்தை நகர்த்திச் சென்று மேல் மாகாணத்தின் 3ஆவது கோலைப் போட்டார்.

சப்ரகமுவ (1-0) வெற்றி

அரியாலை மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் தென் மாகாணத்தை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் சப்ரகமுவ மாகாணம் வெற்றிபெற்றது.

சுவாரஸ்யம் குறைந்து   காணப்பட்ட இப் போட்டியின் 58ஆவது நிமிடத்தில் மத்திய களத்திலிருந்து டி. லியனகே பரிமாறிய பந்தை தனது நெஞ்சினால் கட்டுப்படுத்திய ஏ. எச். எம். முஷ்பிக் மிக திறமையான கோல் ஒன்றைப் போட்டார்.

அதன் பின்னர் மேலதிக கோல் போடப்படவில்லை. இறுதியில் சப்ரகமுவ மாகாணம் 1 - 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இங்கிலாந்துக்கு 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் ...

2024-05-28 19:17:09
news-image

சினா க்ரோன் ப்றீ 400 மீ....

2024-05-28 17:59:53
news-image

தேசிய கராத்தே தெரிவுக்குழு 2024 !

2024-05-28 10:23:17
news-image

பங்களாதேஷைவிட வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை...

2024-05-27 19:58:22
news-image

ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டி:...

2024-05-27 18:36:04
news-image

மகேஸ்வரன் சவால் கிண்ண யாழ். மாவட்ட...

2024-05-27 17:47:06
news-image

இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம்...

2024-05-27 15:59:29
news-image

உலக பரா மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பதக்கம்...

2024-05-27 13:31:34
news-image

ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி  ஐபிஎல்...

2024-05-27 01:37:33
news-image

ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டி இன்று...

2024-05-26 10:41:17
news-image

MCA - ஹொண்டா ஜீ பிரிவு...

2024-05-26 09:38:45
news-image

 உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின்...

2024-05-25 20:58:29