(ஆர்.ராம்)

நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பங்கேற்ற முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் இந்தியாவின் தலையீடே முக்கியம் -  அடித்துக்கூறுகிறார் சுமந்திரன் | Virakesari.lk

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அரசியல் பிரதிநிதிகளாக ரணில் விக்கிரமசிங்க, திஸ்ஸ விதாரன, ஏரான் விக்கிரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன், ஹரணி அமரசூரிய, சாணக்கியன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

பொருளாதார துறை சார் நிபுணர்கள் தரப்பில் உலக வங்கியின் முன்னாள் பொருளியலாளரான சாந்த தேவராஜன், நிஷா டிமல், அணிலா டயஸ் பண்டார, ரோஷன் பெரேரா உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தக் கலந்துரையாடலை ராம் மாணிக்கம் நெறிப்படுத்தியிருந்தார்.

பொதுமக்களின் நிதியை நிருவாகம் செய்யும் பொறுப்பு பாராளுமன்றத்திற்கு உள்ளதென்ற அடிப்படையில் பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிதிக்குழுக்களின் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கி தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் இருந்து எவ்வாறு நாட்டை மீட்டெடுப்பது என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, தற்போதைய அரசாங்கம் நாட்டின் கடன்களை மீளச் செலுத்தி வருகின்ற நிலையில் உள்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு உட்பட மக்கள் அன்றாடம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி தீவிரமாக கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன்ரூபவ் உள்நாட்டில் ஏற்பட்டுவரும் வாழ்வாதார பொருட்களின் பற்றாக்குறை, இறக்குமதிகளில் உள்ள தடைகள் என்பதுள்ளிட்ட பல விடயங்கள் கவனம் செலுத்தப்பட்டன.

அதனடிப்படையில், நாட்டின் கடன்களை மீளச்செலுத்துவது தொடர்பில் மீள் பரிசீலனைகளை செய்தல்ரூபவ் முறைமைகளைரூபவ் நியமங்களை மீள ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. இது கலந்துரையாடலில் பங்கேற்ற அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமன்றி,  இந்த கலந்துரையாடலினை தொடர்ச்சியாக முன்னெடுப்பதோடுரூபவ் நாட்டின் நிதியை கையாளும் முழு அதிகாரமும் பாராளுமன்றத்திற்கு உள்ளமையால் அந்தப் பொறுப்பினையும் முன்னெடுப்பதற்காக ஒரு பாதை வரைவு தயாரிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து இக்கலந்துரையாடலை எதிர்வரும் 10ஆம் திகதி மீண்டும் முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு இக்கூட்டத்தில் பங்கேற்றிருக்காத ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.