ரஷ்­யா­விற்­கான முன்னாள் தூதுவர் உத­யங்க வீர­துங்க தொடர்­பான  தக­வல்­களை சபையில் சமர்ப்­பிக்­கு­மாறு ஜே.வி.பி எம்.பி நலிந்த ஜய­திஸ்ஸ எழுப்­பிய கேள்­விக்கு அர­சாங்கம் இரு­வா­ர­கால அவ­கா­சத்தை கோரி­யது.

நேற்று வியா­ழக்­கி­ழமை கூடிய பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரின் போது வாய்­மூல விடைக்­கான கேள்­வி­ நே­ரத்­தின் ­போது   வெளி­நாட்டு அலுவல் அமைச்­ச­ரிடம் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு  பதி­ல­ளிக்கும் போதே   ஆளும் கட்சி பிர­தம கொற­டாவும் அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். உத­யங்க வீர­துங்க தொடர்­பான கேள்­வி­களில்  அவர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் எவை? அவ­ருக்கு எதி­ரான சட்ட ரீதி­யான நட­வ­டிக்கை தாமதம் அடை­வ­தற்­கான கார­ணங்கள் என்ன? இவரை கைது செய்ய இண்­டர்போல் உதவி கோரப்­பட்­டுள்­ளதா? என்­பன உள்­ள­டங்­கு­கின்­றன. வெளிவிவகார அமைச்சர் சபைக்கு சமுகம் கொடுக்காமையினால் கயந்த கருணாதிலக பதிலளித்தார்.