சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை இலங்கையிலிருந்து கடத்த முயன்ற குற்றத்துக்காக ஐவர் சுங்க அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

–FOREIGN MONEY CURRENCY

சந்தேக நபர்கள் டுபாய் செல்ல முற்படுகையில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவற்றில் 95,000 அமெரிக்க டொலளும், 18,000 யூரோக்களும் மற்றும் 37,000 சவுதி ரியால்கள் இருந்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.