வடக்கு, கிழக்கு காணி பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை. இது உரிமை சம்பந்தப்பட்ட விடயமாகும். இப்பிரச்சினையை காணி ஆணைக்கு நிறுவி உடனடியாக தீர்க்க வேண்டும். இல்லையேல் நாடு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜே.வி.பி., எம்.பி. விஜித ஹேரத் எச்சரிக்கை விடுத்தார்.

இன்று வியாழக்கிழமை கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட காணி கொள்ளுதல் சட்டத்தின் கீழ் கட்டளை வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.