(எம்.எம்.சில்வெஸ்டர்)
தற்போது முதற் கொண்டே நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
இல்லாவிடில், எதிர்வரும் காலத்தில் நாளொன்றுக்கு 4 அல்லது 5 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டி வரும்.
இதனால் முழு நாடும் இருளில் மூழ்கும் அபாய நிலைக்கு தள்ளப்படுவதுடன், பொது மக்கள் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நீர் மூலமான மின்சார உற்பத்தி தற்போது 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
மின்சாரத்தை தொடர்சியாக விநியோகித்து வருவதால் மின் உற்பத்தி நிலையங்களின் அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர் குறைவடைந்து, நாட்டில் மின்சார விநியோகம் பாரியளவில் தடைபடும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
இது குறித்து இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளதாவது,
மின்சார உற்பத்தி நிலையங்களின் அருகாமையிலுள்ள நீர்த் தேங்கங்களிலுள்ள நீர் மட்டம் தற்போது 60 வீதமாக காணப்படுகிறது.
இந்த நீர் மட்டத்தின் அளவு 40 வீதத்திற்கு சென்றதன் பின்னர், மின்சார உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்படும்.
எரிபொருள்களை கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லாததன் காரணமாக , அவசர கொள்வனவின் அடிப்படையில் தனியார் டீசல் நிலையங்களிலிருந்து கூடிய விலைக்கு மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்வதற்கும் முடியாத நிலைமை தோன்றியுள்ளதனால் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் அல்லது இரண்டு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு நடவடிக்கையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் தான்தோன்றித்தனமாக தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், எதிர்வரும் 3 அல்லது 4 வாரங்களின் பின்னர் 4 அல்லது 5 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை மேற்கொள்ள நேரிடம். இதனால் முழு நாடும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் நீர் விநியோகம் தடைப்படாது என நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பிரியத் பந்து விக்ரம குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் காரணங்களால் நாட்டில் மின்சார விநியோகம் தடைப்பட்டாலும், அந்நிலைமைகளை சிறப்பாக கையாண்டு பொது மக்களுக்கு நீர் விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM