களுத்துறை - பயாகல பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுதருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் மூன்று நபர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்த போது குறித்த நபரிடமிருந்து வேறு மூன்று நபர்களின் கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான போலி பத்திரங்கள் என்பன  மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை மற்றும்  5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.