மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.
வவுணதீவு விசேட அதிரடிப் படையினரும் கல்லடி கடற்படை வீரர்களும் நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கஜமுத்துக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புல்லுமலைவழியாக மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிள் மூலம் குறித்த கஜமுத்துக்களை கடத்திய போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைதானவர்களிடமிருந்து 30.8 கிராம் மற்றும் 4.5 கிராம் எடையுள்ள இரு கஜமுத்துக்களும் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM