அனைத்து கட்சிகளும் ஒரு மேடைக்கு வரவேண்டும் - ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு 

Published By: Digital Desk 4

28 Jan, 2022 | 08:30 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் வாழ்வதற்கு நாடு இல்லாமல் போகும். அதனால்  அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

தேசிப்பட்டியல் உறுப்பினராக சரியான நேரத்தில் சரியான ஒருவரை  பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம் - ருவன் விஜேவர்த்தன | Virakesari.lk

கண்டியில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. இதுதொடர்பில் மக்களை அறிவுறுத்தவும் நாட்டை கட்டியெழுப்பும் ஐக்கிய தேசிய கட்சியின் வேலைத்திட்டத்தை மக்கள் மயமாக்கும் நடவைக்கையை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

அரசாங்கத்தின் இயலாமை தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப எமக்கு ஒரு உறுப்பினர் மாத்திரமே இருக்கின்றார். தலைவர் ரணில் விக்ரமசிங்க அந்த நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றார்.

அத்துடன் தற்போதைய அரசியல் நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

நாட்டின் தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமல்ல, அனைத்து கட்சிகளும் ஒரு மேடைக்கு வரவேண்டும். 

என்றாலும் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலையில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் காலம் தூரத்தில் இல்லை. சரியான நேரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணையும் என நம்புகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31