எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4  ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை நாளை (29) முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதனால் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குறித்த கால கட்டத்தில் காலை 07.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும்.

14 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு 07 இல் உள்ள சுதந்திர சதுக்கத்தில் காலை 06.00 மணி முதல் நடைபெறவுள்ளது.