கொத்மலை ரம்பொட பூனாஓயாவில் ஆணின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

28 Jan, 2022 | 05:00 PM
image

(க.கிஷாந்தன்)

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனாஓயாவில் இன்று  (28.01.2022) காலை 11.45 மணியளவில்  ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமொன்று குறித்த ஓயாவில் இருப்பதை கண்ட பிரதேசவாசிகள் கொத்மலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து  ஆற்றில் எரிந்து சென்றார்களா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார்  40 ற்கும் 50 ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஆண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04